Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб திருவள்ளம் பரசுராமர் கோவில் | Thiruvalla Parasuramar Temple | TamilKovilTrips в хорошем качестве

திருவள்ளம் பரசுராமர் கோவில் | Thiruvalla Parasuramar Temple | TamilKovilTrips 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



திருவள்ளம் பரசுராமர் கோவில் | Thiruvalla Parasuramar Temple | TamilKovilTrips

#TamilKovilTrips #KeralaTemples #ParasuramarWorshippedTemples இன்றும் கேரளா கோவில்களின் நகரம் என்றழைக்கப் படுவதற்கான முழு முதற் காரணம் பரசுராமர் என்றால் மிகையல்ல. பரசுராமர் தன் சாபம் நீங்க கேரளாவில் 105 சிவன் கோவில்களும் கர்நாடகாவில் 2 கோவில்களும், தமிழ்நாட்டில் 1 கோவிலிலும் வழிபாடு செய்தார். இதைத் தவிர பகவதி அம்மன் கோவில்களையும் வழிபாடு செய்கிறார். பரசுராமர்க்கும் ஒரு கோவில் இருப்பது சிறப்பான ஒன்று. திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் கடற்கரை செல்லும் வழியில் 3 கிமீ தொலைவில் திருவள்ளா இக்கோவில் அமைந்துள்ளது. நுழைவாயிலில் பரசுராமரின் சிலை தத்ரூபமாக உள்ளது. பரசுராமர் யார்? பூமியில் எப்போதெல்லாம் அதர்மம் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் இறைவன் அவதாரம் எடுப்பதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. விஷ்ணுவின் தசாவதாரத்தில் போற்றுதலுக்குரிய ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம்.சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாதேவிக்கும் மகனாக த்ரேதா-யுகத்தில் அவதரித்தார். சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ள ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவர். அவர் பிறப்பால் ஒரு பிராமணராக இருந்தாலும் கூட, அவர் சிவனையே குருவாக ஏற்றுகொண்டதால் பரசுராமர் பக்திககு பரிசாக பரசு எனும் ஒருவகை கோடாரியை சிவன் அளித்திருந்தார். அவரிடம், ஷத்ரியர்களுக்கே உரித்தான துணிச்சல் மற்றும் போர்க்குணங்கள் நிறைந்திருந்தது. அதனால் அவர் 'பிரம்மா-ஷத்திரியர்' என்றே அழைக்கப்பட்டார்.அதர்மத்தின் வழி வந்த 21 தலைமுறை ஷத்ரியர்களையும் பரசுராமர் கொன்றழித்தார். இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர். பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது அவருக்கு கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிட்டை செய்து தவம் செய்து தோசம் நீங்க பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார். பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தை பூஜை செய்துள்ளனர். இந்த சிவ லிங்கத்தை பரசுராமரின் சீடரும், சிரஞ்சீவிகளில் ஒருவருமான அஸ்வத்தாமன் வழிபட்டிருக்கிறார். பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இங்குள்ள சிவபெருமானை பரசுராமரும், மகாவிஷ்ணுவின் அம்சமாக வேதவியாசரை விபாகரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆதி சங்கரர் தனது தாய் ஆரியாம்பாள்க்கு இக்கோவிலில் தான் தர்ப்பணம் கொடுத்துள்ளார். கரமனை ஆற்றில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்கும் போது குளித்து வருவதற்கு படித்துறை அமைப்பில் உள்ளது. இப்படித்துறை கோவிலின் வலதுபுறம் உள்ளது. கோவிலின் முன்னே தர்ப்பணம் கொடுக்கும் சிறு மேடை உள்ளது. அதன் மேற்கே பெரிய அரசமரத்தில் நாகர் சன்னதியும் அய்யப்பன், பகவதியின் சன்னதியும் உள்ளது. கோவிலின் உள்ளே பரசுராமர் நின்ற கோலத்தில் அதி அற்புதமாக சிலை உருவத்தில் உள்ளார். பரசுராமர் வைத்து வழிபட்ட லிங்கம் தனி சன்னதியில் சிறப்புடன் இருக்கிறார். விஷ்ணுவுக்கும் அருகே சன்னதி உள்ளது. மிகச் சிறிய அளவிலான அழகான கோவில். இக்கோவிலில் வருடத்தின் 365 நாளும் தர்ப்பணம் கொடுக்கும் சிறப்பு பெற்றுள்ளது. ஒருவர் தர்ப்பணம் கொடுக்கும் போது அவரின் 21 தலைமுறைக்கும் சேர்வதாக ஐதீகம். பரசுராமர் ஜெயந்தி விழா டிசம்பர் 24 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து வைணவ கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. பாண்டியர்கள் காலத்தின் பிற்பகுதியில் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மிகவும் அரிதான முறையில் கருங்கற்களால் இக்கோவில் கட்டியிருப்பது சிறப்பு. இந்த பாரம்பரிய கோவில் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச்சின்னங்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. ASI - தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. கோவில் பொறுப்பாளர்கள் கண்ணன் : 9446418904 Temple : 0471 238 0706 Google Map Location : https://maps.app.goo.gl/CXqonAut8ghwf... ‪@tamilkoviltrips‬ Youtube Search Tags #ParasuramarTemples #KeralaTemples #KeralaAncientTemples #KeralaKovil #Tamilkoviltripsvideo #KeralaShetrangal #Keralashivatemples #Prasuramarworshipedtemples #Godsowncountry #God'sowncountryKerala #KeralaParasuramarbuilttemples #Templessivasankar #SivasankarTamilkoviltrips #കേരളത്തിലെ ക്ഷേത്രങ്ങൾ #പുരാതന ശിവക്ഷേത്രങ്ങൾ #പരശുരാമ ക്ഷേത്രം #ആദിശങ്കര ക്ഷേത്രം #തിരുവല്ലം ശിവൻ #തിരുവല്ലം ശിവക്ഷേത്രം #തിരുവനന്തപുരത്തെ ശിവക്ഷേത്രം #തിരുവല്ലം ശിവക്ഷേത്രം #കേരളത്തിലെ പാണ്ഡ്യ ക്ഷേത്രം #കേരളത്തിലെ ഏറ്റവും പഴക്കം ചെന്ന ശിവക്ഷേത്രം Kerala Shivan Temples Kerala Mahadevar Temples Kerala Ancient Temples Thiruvalla Parasuramar Temples Cheranadu shiva temples Tamilkoviltrips sivasankar Dindigul Sivasankar கேரளா சிவன் கோவில்கள் திருவள்ளம் பரசுராமர் கோவில் பரசுராமர் கட்டிய கோவில் பரசுராமர் வழிபட்ட கோவில்கள் பரசுராமர் பரசுராமர் கோடரி பரசுராமர் பாசுபதம் ஜமதக்கினி முனிவர் ஜமதக்கினி ரேணுகா தாயைக்கொன்ற சாபம் ஷத்திரியர்களை கொன்ற பிராமணர் விஷ்ணு தர்மம் தசாவதாரம் பரசுராமர் அவதாரம் கேரளா கோவில்களின் தந்தை கோவில்களின் நகரம் God's own country Kerala Kerala Gods country Thiruvanandhapuram Temples Trivangoor Temples Trivangoor samasthanam temples Kovalam Beach near Shiva Temple Karanamai river shiva temples Parasuraamar Astami பரசுராமர் அஷ்டமி 00:00 - Short 00:13 - Intro & Route 00:48 - பரசுராமர் யார்? 02:52 - தர்ப்பணம் கொடுத்தல் 04:12 - பலிக்கல் 04:21 - பரசுராமர் சிறப்பு 05:35 - பரசுராமர் ஜெயந்தி 05:57 - கோவில் கட்டுமானம்

Comments