Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Chennai Beach To Egmore 4th Line latest update| சென்னை கடற்கரை - எழும்பூர் 4-வது இருப்புப்பாதை 🛤️ в хорошем качестве

Chennai Beach To Egmore 4th Line latest update| சென்னை கடற்கரை - எழும்பூர் 4-வது இருப்புப்பாதை 🛤️ 8 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Chennai Beach To Egmore 4th Line latest update| சென்னை கடற்கரை - எழும்பூர் 4-வது இருப்புப்பாதை 🛤️

Chennai Beach To Chennai Egmore fourth railway line latest update சென்னை கடற்கரை - எழும்பூர் நான்காவது இருப்புப்பாதை பற்றிய தற்போதைய நிலவரம் சென்னை கடற்கரை - எழும்பூர் நான்காவது இருப்புப்பாதை பற்றிய முந்தைய காணொளிக்கான லிங்க்    • Chennai Beach to Chennai Egmore 4th l...   இந்த சென்னை கடற்கரை - எழும்பூர் ரயில்வே வழித்தடத்தில் தற்போது மூன்று இருப்புப்பாதைகள் உள்ளன. அவற்றில் இரண்டு இருப்புப்பாதைகள் புறநகர் ரயில் சேவைக்காகவும், ஒரு இருப்புப்பாதை விரைவு ரயில் சேவை மற்றும் சரக்கு போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தபடுகிறது. இந்த வழித்தடத்தில் ஒரேயொரு இருப்புப்பாதையில் விரைவு ரயில் சேவை மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெறுவதால் இதில் கூடுதல் ரயில் சேவைகள் இயக்க முடியவில்லை. இதற்காக இந்த வழித்தடத்தில் ரூ.279 கோடி மதிப்பில் நான்காவது இருப்புப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கான இட ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தெற்கு ரயில்வே மூலமாக ரூ.5.38 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டு, கடந்த 2020-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கான ஒப்புதலை இந்திய ரயில்வே வாரியம் வழங்கியது. இந்த திட்ட பணிகளுக்காக ரயில்வே வாரியம் 2021 - 22-கான நிதியாண்டில் ரூ.5 கோடியும், 2022 - 23-கான நிதியாண்டில் ரூ.54.2 கோடியும், 2023 - 24-கான நிதியாண்டில் 96.7 கோடியும் ஒதுக்கியது. இந்த நான்காவது இருப்புப்பாதை அமைக்கும் பணிக்காக சென்னை கோட்டை, பூங்கா நகர், பூங்கா ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடைகள் இடிக்கப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கி பகுதிக்கு அடுத்துள்ள பகுதியிலிருந்து பூங்கா நகர் ரயில் நிலையம் வரையில் பறக்கும் பாதைக்கான இருப்புப்பாதைகள் அகற்றப்பட்டு, சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் புதிதாக ஒரு நடைமேடை அமைக்கப்பட்டு, எல்லைப்புற சுவர்கள் அமைக்கப்படுகிறது. மேலும் இந்த நான்காவது இருப்புப்பாதை பணிக்காக கூவம் ஆற்றங்கரை ஓரமாக Secant pile என்று சொல்லப்படுகிற ஒரு விதமான கடைக்கால்கள் அமைக்கப்பட்டு இந்த ஆற்றங்கரை இந்த வழித்தடத்திற்காக பலப்படுத்துகிறது. இவ்வாறாக இந்த ஆற்றங்கரையில் இந்த நான்காவது இருப்புப்பாதைக்காக 651 கடைக்கால்கள், 8 சிறிய பாலங்கள் மற்றும் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை மண் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படுகிறது. தெற்கு ரயில்வே கூற்றுப்படி இந்த நான்காவது இருப்புப்பாதை இன்னும் ஏழு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments