Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musical в хорошем качестве

அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musical 11 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musical

Anjanai Mainda || Sri Jaya Hanuman || Anjaneyar Songs || Hanuman tamil songs Singer : Prabhakar Music : Sivapuranam D V Ramani Lyrics : Ravi Rangaswamee Produced by Vijay Musicals #Anjaneyasongs#Hanumansongstamil#VijayMusical *In This video Hanuman Abisegam is done* To get more updates follow us on : Instagram -   / vijaymusicals   Facebook -   / vijaymusical   பாடல் வரிகள் | Lyrics அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா காத்தருள்புரிந்திடு ஹனுமானே தேற்றிடு ஏற்றிடு மாருதியே அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மச்சாரிய ஹனுமானே சின்னத்திருவடியே மாருதியே சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் உள்நாடு வெளிநாட்டில் பேரருள் புரியும் ஹனுமானே தேவைகள் நிறைவேற அருள்வாயே சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில் பேரருள் புரியும் சுந்தரனே வானவர் போற்றும் வானரனே துளசிமாலை போடுகிறோம் வெண்ணை சாத்தி வணங்குகிறோம் அலங்கார அழகில் மகிழ்கிறோம் அனுதினம் உன்னை பூஜிக்கிறோம் வாராவாரம் சனிக்கிழமை வணங்கிமகிழும் பக்தர்களை திருவருள் புரிந்து காக்கின்றாய் வேண்டுதல் யாவும் தீர்க்கின்றாய் சஞ்சீவி மூலிகை கொண்டுவந்தே லக்ஷ்மணர் உயிரை மீட்டெடுத்தாய் ராமர் வருகை தெரிவித்தே பரதனின் உயிரை காப்பாற்றினாய் சீதையைத் தேடிச்சென்றாயே அசோகவனத்தில் கண்டாயே ஸ்ரீ ராம் ராம் என ஜெபித்தாயே சீதையின் தற்கொலை தடுத்தாயே வாலைச் சுருட்டி அந்தரத்திலே ஆசனமமைத்து அமர்ந்தாயே ராவணனுக்கு அறிவுரை சொன்னாயே ஸ்ரீலங்காவை எரித்தாயே போர்க்களத்தில் தோள்மீதே ராமர் லக்ஷ்மணரை சுமந்தாய் வானர சேனை உயிர்பித்தாய் வெற்றி நமதென முழக்கமிட்டாய் வானவர் பூஜிக்கும் வானரமே வாழ்வாங்கு வாழும் சிரஞ்சீவியே அஞ்சனை மைந்தா ஆரத்தரிப்பாய் எந்தனைக் காத்து ரக்ஷிப்பாய் அர்ஜுனர்க்கொடியினில் நீயமர்ந்தே பாரதப்போரில் வெற்றித்தந்தாய் பீமனின் அண்ணனே ஆஞ்சநேயா எமக்கும் வெற்றித்தருவாயே ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவனைபூஜிக்க விரும்பியதும் சிவனிடம் லிங்கம் வாங்கிவர சென்றநீ தாமதமாய் வந்தாய் சீதா தேவியும் மண்குவித்தே லிங்கம் ஒன்றை செய்துவிட்டார் நீ கொண்டுவந்திட்ட லிங்கத்திற்கே முதலில் பூஜை நடக்குதய்யா எழரை சனியின் அஷ்டம சனியின் கண்ட சனியின் தோஷமெல்லாம் உன்னைக் கண்டால் போய்விடுமே எம்மைக் காத்திடு ஆஞ்சநேயா தூபம் தீபம் காட்டினோமே துளசித் தீர்த்தம் கிடுத்தோமே குங்குமம் நெற்றியில் வைத்தோமே மங்கள வாழ்வை வேண்டினோமே அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தரே விஸ்வரூபம் எடுத்தவரே காற்றில் மிதந்து சென்றவர் நீரினில் மூழ்காது நடந்தவரே சிவனும் தேரேறி வந்தாரே சிரிப்பால் முப்புரம் எரித்தாரே சிவனார் அம்சம்நீ அனுமாரே வாலால் இலங்கையை எரித்தாயே அஞ்சலை ஹஸ்தம் ஆஞ்சநேயா அஞ்சலை செய்தோம் அருள்வாயே பக்தவீரயோக ஆஞ்சநேயா பக்தர் எம்மைக் காப்பாயே வரதஹஸ்தம் ஆஞ்சநேயா வலிமை வளமை அருள்வாயே ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயா சிந்தித்து செய்யப்பட செய்வாயே சீதா ராமர் லக்ஷ்மணரை சேவித்து மகிழும் ஆஞ்சநேயா ராம கதாகாலஷேபம் கேட்டு மகிழும் ஆஞ்சநேயா சூரியனை குருவாய் ஏற்றாயே தேரின் பின்விரைந்தது நடந்தாயே வேத சாஸ்திரங்கள் கற்றாயே கற்றதற்கேற்ப நின்றாயே சீதை மட்டுமே கட்டித்தழுவும் ராமரை நீகட்டித்தழுவினாய் சீதையை அன்னை என்றாயே சீதை அம்மை அப்பன் என்றாரே சீதை ஈன்ற முத்து மாலையை உடைத்து உடைத்து பார்த்தாயே குரங்கு புத்தி போகலையென கூடியிருந்தோர் பேசினரே எதிலும் இருக்கும் ராமபிரான் முத்தில் ஏன் இல்லையென்றாய் நெஞ்சைப்பிளந்து காண்பித்தாய் ராமபக்தியை நிரூபித்தாய் ராமர் லக்ஷ்மணர் சீதையிடம் அரக்கர்கூட்டம் ராவணனிடம் பரதன் பாண்டவ பீமனிடம் விஸ்வரூபம் எடுத்தாயே பிரம்மச்சரியம் கடைபிடித்தாய் சின்னத் திருவடியெனவே பேரெடுத்தாய் உன்திருவடியை போற்றுகிறோம் உன்னதவாழ்வினை வேண்டுகிறோம் வடைமாலைகளை சாற்றுகிறோம் வாயார உன்புகழ் பாடுகிறோம் தடைகள் யாவும் தகர்த்திடுவாய் பீடைகள் எல்லாம் போக்கிடுவாய் உன்பெயர் எழுதிய மாலையை ஒவ்வொரு நாளும் சாற்றுகிறோம் வாழ்வில் ஒவ்வொரு முன்னேற்றமும் உன்திருவடியில் சமர்பிப்போம் சொல்லின் செல்வரே ஆஞ்சநேயா சொல்லிமாளாது உம் புகழை அறிவிற்சிறந்த அனுமானே சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியே அரியணை தாங்கிய அனுமானே அறிவினை வழங்கும் மாருதியே அஞ்சாமை தந்திடு ஆஞ்சநேயா கெஞ்சிடவிடாமல் அருளிடய்யா குற்றம் பொறுத்த நாதரையே தலைஞாயிறில் வழிபட்டாயே திருகுறக்காவல் என்னும் ஊரினிலேமூர்த்தி தீர்த்தம் அமைத்தாயே சிவனை நிந்தித்த தோஷத்தையே நிவர்த்தி செய்திட வழிபாட்டாய் குரக்குக்காவின் சிவத்தலத்தில் குரங்குகள் இன்றும் வழிபடுதே மந்திரி பதவிவகித்த மந்தியே உம்மைத்தொழுவோம் அந்திசந்தியே சஞ்சீவி பர்வதம் கையிலேந்தியே காற்றோடு காற்றாய் மிதந்துவந்தியே அபயம் புகுந்த விபீஷணனை அண்ணலிடமேற்கச் சொன்னாயே அபயம் புகுந்தோம் நாங்களுமே அபயம் அபயம் ஆஞ்சநேயா சீதை என்னும் ஜீவாத்மாவை பிறவியென்னும் சிறையிலிருந்து ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்த்த சர்குரு ஆஞ்சநேயா விலங்காய் பிறந்து தெய்வமானாய் விதியை மதியால் வென்றாயே ஆலோசனை சொன்னாய் ராமருக்கே ஆறுதல் சொல்வாய் பக்தருக்கே மேனிமுழுதும் கேசமய்யா நெற்றிமுழுதும் திருமண்ணய்யா நெஞ்சமுழுதும் சீதாராமர் சிந்தனை முழுதும் ஸ்ரீராம் ஜெயராம் வாலில் குட்டிட்டு வணங்குகிறோம் வலம்வந்து வரம்பல வேண்டுகிறோம் வாகனம் நிறுத்தி பூஜை செய்கிறோம் சாலைவிபத்தை தடுத்திடுவாய் காலைசூரியனை பழமென்று பறித்து தின்ன பாய்ந்தாயே தடுத்த ராகுவை வென்றாயே ராகுதோஷம் களைவாயே சதுர்புஜ பஞ்சமுக ஆஞ்சநேயா சத்ருவை வாலால் சுழட்டிடுவாய் பில்லி சூனியம் எடுத்திடுவாய் பகைமையெல்லாம் ஓட்டிடுவாய் பதினெட்டடி உயர சிலைவடித்தே பக்தியுடன் உன்னை பூஜிக்கிறோம்

Comments