Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஆடிப்போன சென்னை-யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? | who is Armstrong | BSP leader Armstrong | Armstrong case в хорошем качестве

ஆடிப்போன சென்னை-யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? | who is Armstrong | BSP leader Armstrong | Armstrong case 4 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஆடிப்போன சென்னை-யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? | who is Armstrong | BSP leader Armstrong | Armstrong case

ஆடிப்போன சென்னை-யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? | who is Armstrong | BSP leader Armstrong | Armstrong case தலைநகர் சென்னையில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உட்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். காரணம், ஆம்ஸ்ட்ராங் சாதாரண நபர் இல்லை. அரசியல்வாதி, வக்கீல், தலித் மக்கள் போராளி, ஆர்வலர் என அவருக்கு பல முகம் உண்டு. ஆம்ஸ்ட்ராங்குக்கு வயது 52. சென்னை தான் பூர்விகம். இவரது மனைவி பொற்கொடி. ஆம்ஸ்ட்ராங்கின் தந்தை திராவிடர் கழகத்தில் முழு நேர ஊழியராக இருந்தவர். அவர் வசித்து வந்த பகுதியினர் பலரும் திகவில் தான் இருந்தார்கள். இதனால் இயல்பாகவே அந்த தாக்கம் ஆம்ஸ்டராங்கிடம் இருந்தது. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலையில் சட்டம் படித்தார். சிறுவயதிலேயே அரசியல் ஆர்வமும் இருந்தது. தலித் மக்கள் அதிகளவில் சட்டம் படிக்க வேண்டும் என்று விரும்பினார். பலரை சட்டம் படிக்கவும் வைத்தார். 2006ல் இளைஞர்களுடன் சேர்ந்து டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் என்ற அமைப்பை துவங்கினார். அந்த நேரத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பினார். பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இடும்பன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் வழிகாட்டுதலுடன் 99வது வார்டில் யானை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் போட்டியிட்டார். வெற்றி பெற்று கவுன்சிலரும் ஆனார். பகுஜன் சமாஜ் கட்சி கொள்கை அவருக்கு பிடித்துப்போனது. இதையடுத்து தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்த சுரேஷ் மானேவை சந்தித்து 2007ல் முறைப்படி கட்சியில் சேர்ந்தார். கையோடு மாநில தலைவர் பதவியும் அவருக்கு தேடி வந்தது. அன்று முதல் இறுதி வரை 17 ஆண்டுகள் மாநில தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருந்தார். துவக்க காலத்தில் ஆம்ஸ்ட்ராங்குக்கு மேடையில் பேசுவது கடினமாக இருந்தது. போகப்போக சரமாக பேச துவங்கினார். அதிமுக, திமுகவுக்கு எதிராகவும் தயக்கம் இன்றி முழக்கங்களை முன் வைத்து வந்தார். குறிப்பாக தலித் மக்கள் பிரச்சனைகளுக்கு தீவிரமாக குரல் கொடுத்து வந்தார். தலித்களுக்கு எதிரான பிரச்சனைகள், நீட் விவகாரம் தொடர்பாக பல போராட்டங்களை நடத்தி உள்ளார். 2011 சட்டசபை தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் போட்டியிட்டார். 68,784 ஓட்டு வாங்கிய ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆம்ஸ்ட்ராங்குக்கு 3,894 ஓட்டு கிடைத்தது. 2.7 சதவீதம் ஓட்டு பெற்றார். மூன்றாம் இடம் கிடைத்தது. பெரம்பூர் பகுதியில் செல்வாக்கு நிறைந்த நபராக ஆம்ஸ்ட்ராங் வலம் வந்தார். அவர் மீது பல வழக்குகளும் நிலுவையில் இருந்தன. அவருக்கு கொலை மிரட்டலும் தொடர்ந்து இருந்தது. இதனால் பாதுகாப்பு வளையம் போல் அவரை சுற்றி எப்போதும் ஆதரவாளர்கள் இருப்பார்கள். லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியும் ஆம்ஸ்ட்ராங் வைத்திருந்தார். இருப்பினும் அவரை திட்டமிட்டு தீர்த்துக்கட்டி விட்டது கொலை கும்பல்.#whoisArmstrong #BSPleaderArmstrong #Armstrongcase

Comments